students

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் சி.டி.ஸ்கேன் வசதி: துணைவேந்தர்

Webdesk | Friday, December 23, 2016 12:52 PM IST

தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது என்றார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.திலகர்.
 நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் ]

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

  •  நிகழாண்டில் புதிதாக கால்நடை செவிலியர் உதவியாளர் கல்வி புதுக்கோட்டையில் உள்ள மண்டல ஆராய்ச்சி மையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தப் படிப்புக்கு 10-ஆம் வகுப்புத் கல்வி தகுதியுடன், 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு ஆண்டு படிப்பு, வகுப்புகள் வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது. கால்நடை மருத்துவமனையில் வேலை செய்ய திறனுடைய நபர்கள் தேவை என்பதற்காக இந்தப் படிப்பு தொடங்கப்படுகிறது.

 கால்நடைகளுக்கான நோய்களை துல்லியமாகக் கண்டறியும் வகையில் சி.டி. ஸ்கேன் தமிழகத்திலேயே முதல் முறையாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் வரவுள்ளது. அதன் பின்னர் சென்னை கல்லூரிக்கும் சிடி ஸ்கேன் கொண்டு வரப்படும். இதற்காக நபார்டு வங்கி நிதி உதவி அளித்துள்ளது.
 நாமக்கல் கல்லூரியில் மாணவர்களின் வகுப்பறைகள், தேர்வு அறைகளுக்கு குளிர்சாதன வசதி, உதவி மையம், மருத்துவ மையம் உள்ளிட்ட வசதிகள் மூலம் இந்தக் கல்லூரி மாணவர்களுக்கு நவீன மயமான கல்வி சூழல் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
 நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. விவசாயிகள் 1962 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, நோயுற்ற கால்நடைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.