tamil

குரூப் 4 கலந்தாய்வு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும்– டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Webdesk | Friday, September 7, 2018 7:42 AM IST

குரூப் 4 கலந்தாய்வு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும்– டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 4 தேர்வுடன் சேர்த்து வி.ஏ.ஓ. தேர்வும் ஒன்றாக நடத்தப்பட்டதால், தேர்வாணையத்துக்கு சுமார் 12 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு அறிவிப்பின்போது 9,351 காலிப் பணியிடங்கள் இருந்தன. நேற்றைய நிலவரப்படி,  11,280 காலியிடங்களாக அதிகரித்துள்ளன.

குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எந்த வித விசாரணைக்கும் டி.என்.பி.எஸ்.சி. ஒத்துழைப்பு அளிக்கும். தேர்வாணையம் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இனி வரும் தேர்வுகளிலும் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 27 கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 50,000 - 60,000 தேர்வர்கள் இருக்கக்கூடிய தேர்வுகள் மட்டுமே கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.அனைத்து தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த தோராய அட்டவணை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2017-இல் நடைபெற்ற  குரூப் 1 முதன்மை தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 3 மாதங்களுக்குப் பின் இதன் முடிவுகள் வெளியாகும்.

குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டபோது இருந்த 494 வி.ஏ.ஓ. பணியிடங்கள் நேற்று வரை 1,107 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, பிற பதவிகளிலும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன. இது மேலும் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. கலந்தாய்வு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும். தேர்வு எழுதியவர்கள் எந்த இ-சேவை மையங்களில் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற தகவல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.