tamil

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...

Jayaseeli | Wednesday, May 24, 2017 8:33 AM IST

சென்னை: பிளஸ் 2 வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று நண்பகலில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை WWW.CBSERESULTS.NIC.IN என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 10.98 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், மே 19ம் தேதியில் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.