tamil

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று ‘ரிசல்ட்’

Webdesk | Thursday, June 21, 2018 7:40 AM IST

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று ‘ரிசல்ட்’

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு, இன்று வெளியாகிறது.பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களில், மதிப்பெண்ணில் சந்தேகம் உள்ளவர்களுக்கு, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் அளிக்கப்பட்டது.இதில் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று பிற்பகலில் முடிவு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.தேர்வு முடிவுகளை, http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.