tamil

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு...

Webdesk | Sunday, June 3, 2018 10:18 AM IST

 கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு...

கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழிநுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளும் உள்ளன.10,000 பேர் விண்ணப்பம்: இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மே 21 -ஆம் தேதி தொடங்கின. கால்நடை மருத்துவப் படிப்புக்கு8,639 விண்ணப்பங்கள், பி.டெக் படிப்புகளுக்கு 1,734 விண்ணப்பங்கள் என இதுவரை மொத்தம் 10,373 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளன.இந்தப் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 6 -ஆம் தேதி கடைசி என்றும், பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஜூன் 11 -ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம்: இந்நிலையில், இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 11 -ஆம் தேதி வரையும், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஜூன் 18-ஆகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள்: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அயல்நாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்தோர் ஆகியோர் சனிக்கிழமை முதல் (ஜூன் 2) ஜூலை 6 -ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.பதிவு செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு ஜூலை 20 -ஆம் தேதி கடைசியாகும். விண்ணப்பங்களை www.tanuvas.ac.in - இல் பதிவு செய்யலாம்