tamil

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கப்படும்- பள்ளிக் கல்வித் துறை

Webdesk | Wednesday, January 17, 2018 9:28 AM IST

தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளிகளுக்கும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் நாளிதழின் ஒவ்வொரு பிரதி வழங்கப்படும் என்றார் அவர்.