tamil

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு

Jayaseeli | Saturday, May 27, 2017 8:43 AM IST

'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.

இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்.அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.