tamil-nadu

கால்நடை செவிலிய படிப்பு தொடக்கம்...

webdesk | Saturday, December 24, 2016 10:31 AM IST

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் கால்நடை செவிலிய உதவியாளர் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் படிப்பு புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தச் சான்றிதழ் படிப்புக்கான கால அளவு 11 மாதமாகும். இதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 128 மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. 75 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மையத்தில் வெள்ளிக்கிழமை முதல் இந்தப் படிப்புக்கான வகுப்புகள் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.