students

ஐ.ஏ.எஸ் தேர்வு: இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வை நடத்துகிறது ஃபோக்கஸ் அகாதெமி

Webdesk | Thursday, December 8, 2016 11:53 AM IST


ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில், இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஃபோக்கஸ் அகாதெமி சார்பில் நடத்தப்படுவதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.ஏ.எஸ் தேர்வில் பங்கேற்ற விரும்பும் மாணவர்களுக்கு ஃபோக்கஸ் அகாதெமியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு வரும் 14 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பட்டப்படிப்பு முடித்த 30 வயதுக்குள்பட்டோர் பங்கேற்கலாம். இதில் தகுதியின் அடிப்படையில் 50 பேர் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களுக்கு முதல்நிலை, முதன்மைத் தேர்வுக்களுக்கான பாடக்குறிப்புகளும் கட்டணமின்றி வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் தக்க சான்றிதழ்களுடன் அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இதுதொடர்பாக 94427 22537 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.