students

ஒற்றைச்சாளர முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தக் கோரிக்கை ..!!

webdesk | Monday, December 26, 2016 10:43 AM IST

ஒற்றைச்சாளர முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என புதுச்சேரி அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
 அதன் தலைவர் மு.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை:
 புதுச்சேரி அரசு 2017-2018 ஆம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்பின் மாணவர்கள் சேர்க்கை மாணவர்களின் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுமா அல்லது பிளஸ்-2 பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுமா அல்லது நீட் மதிப்பெண்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுமா என்பதை காலம் கடத்தாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து, புதுச்சேரி அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
 ஒற்றைச்சாளர முறை
 புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையைத் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் புதுச்சேரி அரசு தான் பொதுக் கலந்தாய்வு மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
 நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் புதுச்சேரி மாநில மாணவர்கள் மருத்துவம் படிக்கும் சூழ்நிலை உருவாகினால் புதுச்சேரி அரசின் காமராஜர் கல்வி நிதி உதவி கிடைக்குமா என்பதை அரசு தெளிவு
 படுத்தி அறிவிக்க வேண்டும்.
 2017-2018 வரும் கல்வி ஆண்டுமுதல் முதுகலை மருத்துவ படிப்பையும் புதுச்சேரி அரசின் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர்களை சேர்க்க வேண்டும்.
 மருத்துவ படிப்புக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகையை 4 ஆண்டுகளுக்கு மட்டும்தான் வழங்குகிறது ஆனால், கல்லூரிகள் 5 ஆண்டு கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்தி வசூலித்த தொகையை மாணவர்களுக்கு திருப்பி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...